வவுனியா பல்கலைக்கழகத்தின் ஆரம்ப நிகழ்வு ஒத்திவைப்பு!
 Saturday, August 7th, 2021
        
                    Saturday, August 7th, 2021
            
வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்ப நிகழ்வுகள் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளன.
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் வவுனியா பல்கலைகழகமாக அண்மையில் தரமுயர்த்தப்பட்டது.
இந்நிலையில் அதன் ஆரம்ப விழாவை எதிர்வரும் 11 ஆம் திகதி நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினராக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ கலந்து கொள்ளவிருந்தார்.
இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பை கருத்திற் கொண்டு அரச நிகழ்வுகள் அனைத்தும் செப்டெம்பர் முதலாம் திகதிவரை பிற்போடப்பட்டுள்ள அறிவிப்பு இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவினால் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த நிகழ்வும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
2 வாரங்களில் அரச உத்தியோகத்தர்களுக்கு வாகன உறுதிப்பத்திரங்கள்!
கணவரின் மூர்க்கத்தனமான தாக்குதலில் மனைவி படுகாயம் 
பரிசோதனை நடத்தப்பட்டவர்களில் 3 வீதமானவர்களே கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்- ஜனாதிபதி ஊடகப்பிரிவு ...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        