வழித்தடம் இன்றி பயணிகள் சேவை: சாரதிக்கு அபராதம்!

Saturday, October 15th, 2016

உரிய வழித்தட அனுமதியின்றி கொழும்பு – யாழ்ப்பாணம் பேருந்து சேவையில் ஈடுபட்ட சாரதிக்கு 25ஆயிரம் ரூபா அபராதம் விதித்தார் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவான் திருமதி சிறி.நிதி நந்தசேகரன்.

கடந்த வாரம் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சேவையில் ஈடுபட்டிருந்த பேருந்து ஒன்றினை கொடிகாமம் பகுதியில் இடைமறித்த கொடிகாமம் பொலிஸார் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது வழித்தட அனுமதியின்றி பயணிகள் சேலை நடத்தியமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து வாகனத்தை பொலிஸ் நிலையம் எடுத்து வந்த பொலிஸார் சக பயணிகளை விறிதொரு பேருந்தில் அனுப்பி வைத்தனர். மேற்படி சாரதியை நேற்று முன்தினம் சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தியபோது அவர் தனது குற்றத்தினை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

1540203516Courts

Related posts: