வழமைக்கு திரும்பும் பாடசாலைகள் – பெற்றோர்கள் மாணவர்களைப் பாதுகாப்பாக அனுப்ப வேண்டும் என சுகாதார தரப்பு வலியுறுத்து!

நாளை திங்கட்கிழமைமுதல் பாடசாலைகள் வழமைக்குத் திரும்புவதால் பெற்றோர்கள் மாணவர்களைப் பாதுகாப்பாக அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு மற்றும் மத்தியக் குழுவின் உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தாங்கள் ஏற்கனவே அரசாங்கத்திடம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் எந்த தருணத்தில் வேண்டுமாக இருந்தாலும் போராட்டத்தை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை நாட்டிற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்துள்ளது.
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட அஸ்ட்ராசெனெகா, மொடர்னா, ஸ்புட்னிக், சைனோஃபார்ம் மற்றும் ஃபைசர் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 48 இலட்சத்து 560 ஆயிரத்து 424 ஆக பதிவாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதில் 6.8 மில்லியன் தடுப்பூசிகள் நன்கொடையாகப் பெறப்பட்டவை என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|