வறிய மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு ஈழ மக்கள் ஜனநா கட்சியின் பிரான்ஸ் கிளை உதவிக்கரம்

Friday, January 25th, 2019

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் உள்ள வறிய குடும்பங்களின் வாழ்வாதார செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரான்ஸ் கிளையின் முயற்சியால் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சிறுகடை மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது.

வறுமை நிலை காரணமாக தமிழ் மக்கள் பலர் தமது வாழ்வாதாரத்துக்கான பொருளாதாரம் இன்மையால் நாளாந்தம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த மக்களது வாழ்வாதாரத்தை தூக்கி நிறுத்தும் முகமாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பிரான்ஸ் கிளை தோடர்பாளர் செல்வம் அவார்களால் குறித்த உதவித்திட்டம் வழங்கிவைக்கப்பட்டது

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் எண்ணக்கருவான தாயக மக்களின் மீழெழுச்சிக்கு புலம்பெயர் தேச உறவுகள் கரங்கொடுக்க வேண்டும் என்பதற்கிணங்க இந்த செயற்பாடு அமைந்துள்ளமையானது தாயகத்தில் வாழும் எமது மக்களின் வாழ்வியலுக்கு புலம்பெயர் தேச உறவுகளின் நேசக்கரம் நீட்டலின் ஓர் அங்கமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG-4ae08305d67b6a866f64bc86426aca45-V

 

Related posts: