வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 6 ஆயிரத்து 261 டெங்கு நோயாளர்கள் பதிவு – சுகாதார அமைச்சு தகவல்!

Friday, March 18th, 2022

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், 6 ஆயிரத்து 261 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில், 4 ஆயிரத்து ,522 என்ற அளவில், அதிக எண்ணிகையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

பெப்ரவரி மாதத்தில் ஆயிரத்து ,511 டெங்கு நோயாளர்களும், மார்ச் மாதத்தின், இதுவரையான காலப்பகுதியில் 228 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இடைக்கிடையே மழை பெய்கின்றமையால், மீண்டும் டெங்கு நுளம்புகள் பரவும் இடங்கள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


கையடக்கத் தொலைபேசி பாவனையினால் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மூளை வளர்ச்சியுடன் பார்வைக் குறைபாடும்...
வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணி...
கத்தரிக்காயில் மனித உடலுக்கு ஆபத்தான கிருமிநாசினிகள் - ஆய்வுகள் மூலம் வெளியானது அதிர்ச்சி தகவல்!