வரிச் சலுகையை இழந்ததால் கடந்த காலத்தில் 37 ஆயிரம் கோடி இழப்பு!
Friday, January 13th, 2017
இலங்கை ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை இழந்ததால் கடந்த காலத்தில் 37 ஆயிரம் கோடி ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அதனை மீள கொடுக்குமாறு ஐரோப்பிய ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்ததும் வரிச்சலுகை அமுலுக்கு வரவுள்ளது. வரிச்சலுகை மீண்டும் கிடைப்பதன் மூலம் துறைசார்ந்த உற்பத்திகளுக்கான 66 சதவீத வரி முற்றுமுழுதாக நீக்கப்படும்.
இலங்கைக்கு மீண்டும் ஆடை உற்பத்தி, கடற்றொழில், இறப்பர் உற்பத்தி துறைகள் சார்ந்த ஏற்றுமதிகளுக்கு கூடுதல் அனுகூலங்கள் கிடைக்குமென்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது 2007ஆம் ஆண்டு வரிச் சலுகை மட்டுப்படுத்தப்பட்டது. 2010ஆம் ஆண்டில் முற்றுமுழுதாக நிறுத்தப்பட்டது. இதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட நட்டம் 37 ஆயிரம் கோடி ரூபாவை தாண்டுவதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

Related posts:
பண்டிகைக்கால முறைகேடுகள் குறித்து பயணிகள் முறையிடலாம் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!
உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் மார்ச் மாதத்தின் இறுதிப் பகுதியில் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் பே...
தேவையான அரிசியை நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு...
|
|
|


