வன்முறைச்சம்பவங்களுடன் தொடர்புடையவர் மீது சரமாரி வாள்வெட்டுத் தாக்குதல் – கல்வியங்காடு பகுதியில் சம்பவம்!
Thursday, September 17th, 2020
வன்முறைக் கும்பலைச் சேர்ந்த விக்டர் சுந்தர் என்பவர் மீது மற்றொரு கும்பலால் வாள்வெடுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கால்கள் மற்றும் கைகளில் படுகாயமடைந்த விக்டர் சுந்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று காலை 7 மணியளவில் யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், நாயன்மார்க்கட்டு பகுதியைச் சேர்ந்த விக்டர் சுந்தர், பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று பொலிஸாரால் தெரிவிக்கப்படுகின்றது.
அவர் இன்று காலை கல்வியங்காடு பகுதியில் நின்ற போது, மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த மற்றொரு கும்பல், அவர் மீது சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பித்துள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
|
|
|


