வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!
Wednesday, August 29th, 2018
வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.
பொலிஸாருடன் நேற்று(28) இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததையடுத்து, இன்று(29) முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை வனஜீவராசிகள் சங்கத்தின் தலைவர் இந்திக வசந்த பீரிஸ் குறிப்பிட்டார்.
மின்னேரியா தேசிய பூங்காவில் பணிபுரியும் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளைத் தாக்கிய சம்பவம் தொடர்பிலான சந்தேகநபர்களைக் கைது செய்யுமாறு கோரியே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹபரணை பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன்பின்னர், எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
வடக்கின் முதல்வர் புதிய கட்சியை ஆரம்பிப்பார் - இந்தியன் எக்ஸ்பிரஸ்
பாதுகாப்பு தரப்பினர் பீரங்கிகளை மட்டுமல்ல மருத்துவத்திலும் கைதேர்ந்தவர்கள் - நாட்டு மக்களை பாதுகாக்க...
இலங்கையை மீண்டும் முடக்குமா கொரோனா - மேலும் 6 பேர் அடையாளம்!
|
|
|


