வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயைச் சந்தித்து கலந்துரையாடிய சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கட் வோல்ஸ்டோம் உள்ளிட்ட குழுவினர்

இலங்கைக்கான சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கட் வோல்ஸ்டோம் அடங்கிய ஏழுபேர் கொண்ட குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இதன் ஒரு கட்டமாக யாழ்.மாவட்டத்திலுள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கும் நேற்றுச் (26-) விஜயம் செய்த குறித்த குழுவினர் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேவையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் சுவீடன் நாட்டின் அபிவிருத்திப பணிகள் மற்றும் இலங்கை, சுவீடன் ஆகிய இருநாடுகளுக்கிடையில் காணப்படுகின்ற பொருளாதார,சமூக நல்லிணக்கத்திகற்கான பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டன.
இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார ரீதியான கட்டமைப்பை மேலும் வலுச் சேர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. எமக்கான உறவுப்பாலம் தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமென எதிர்பார்ப்பதாக சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கட் வோல்ஸ்டோம் வடமாகாண ஆளுநரிடம் இந்தச் சந்திப்பின் போது எடுத்துரைத்ததாகவும் தெரிய வருகிறது.
Related posts:
|
|