வடமாகாணத்துக்கு இன்னும் 48 அம்புலன்ஸ்கள் தேவை – சுகாதார அமைச்சு !

Sunday, May 6th, 2018

வடக்கு மாகாண சுகாதார அமைச்சுக்குட்பட்ட மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களுக்கு இன்னும் 48 நோயாளர் காவு வண்டிகளின் தேவையுள்ளது என்று மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது பற்றி அந்த அமைச்சு மேலும் தெரிவித்ததாவது:

வடக்கு மாகாணத்தில் நோயாளர்களின் நன்மை கருதி நோயாளர் காவு வண்டிகள் சேவையில் உள்ளன. ஆனால் இன்னமும் வண்டிகளின் தேவைகள் அதிகம் உள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்குக் கோரிக்கைகளை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் நிலையத்தில் 32 வண்டிகள் உள்ளன. அவற்றில் 2 பழுதடைந்துள்ளன. இன்னமும் 8 வண்டிகள் தேவை.  வவுனியாப் பிராந்திய சுகாதார சேவைகள் நிலையத்துக்கு 14 வண்டிகள் உள்ளன.

அவற்றில் ஒரு வண்டி பழுதடைந்துள்ளது. 4 வண்டிகள் இன்றும் தேவையாக உள்ளன. முல்லைத்தீவுப் பிராந்திய சுகாதார சேவைகள் நிலையத்துக்கு 15 வண்டிகள் உள்ளன. அவற்றில் 2 வண்டிகள் பழுதடைந்துள்ளன. 8 வண்டிகளின் தேவை காணப்படுகின்றது. மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் நிலையத்துக்கு 16 வண்டிகள் உள்ளன.

அவற்றில் 5 வண்டிகள் பழுதடைந்துள்ளன. அங்கு இன்னும் 9 வண்டிகள் தேவையாக உள்ளன. கிளிநொச்சிப் பிராந்திய சுகாதார சேவைகள் நிலையத்துக்கு 13 வண்டிகள் உள்ளன. 4 வண்டிகள் பழுதடைந்துள்ளன. 9 வண்டிகள் தேவையாக உள்ளன.

வவுனியா மாவட்ட மருத்துவமனைக்கு 8 வண்டிகள் உள்ளன. ஒன்று பழுதடைந்துள்ளது. 3 வண்டிகளின் தேவை காணப்படுகிறது. முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு 3 வண்டிகள் உள்ளன. அவற்றுடன் மேலும் 3 வண்டிகளின் தேவை காணப்படுகிறது.

மன்னார் மாவட்ட மருத்துவமனைக்கு 5 வண்டிகள் உள்ளன. அங்கும் ஒன்று தேவையாக உள்ளது. கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கு 4 வண்டிகள் உள்ளன. எனினும் அங்கும் 2 வண்டிகளின் தேவையாக உள்ளன.

Related posts: