வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு வெள்ளி விடுமுறை!
Tuesday, January 10th, 2017
வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் தைப்பொங்கல் தினத்துக்கு முன்தினமான எதிர்வரும் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பதில் பாடசாலை எதிர்வரு; 21ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறும் என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
நாளை மறுதினம் 12ஆம் திகதி விடுமுறை நாளாகவுள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி தைப்பொங்கல் தினம். இதனால் வெள்ளிக்கிழமை பாடசாலையை நிறுத்தி அதற்குப் பதிலாக 21ஆம் திகதி அனைத்துப் பாடசாலைகளும் இயங்கும் என அவர் தெரிவித்தார்.

Related posts:
கொச்சி விமான நிலையத்தில் பதற்றம்: காரணம் வெளியானது!
ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள் பூர்த்தி - சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி!
எதிர்வரும் காலாண்டுப் பகுதிக்குள் எந்தவொரு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படமாட்டாது - வர்த்தக அம...
|
|
|


