வடக்கு தென்னை முக்கோண வலய பயிர்செய்கை நடவடிக்கை மன்னாரில் ஆரம்பம்!

Saturday, November 18th, 2023

நாட்டின் இரண்டாவது தென்னை முக்கோண வலயமான வடக்கு தென்னை முக்கோண வலய பயிர்செய்கை நடவடிக்கை மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்னம் கன்றுகளை நாட்டும் நிகழ்வு நேற்று(17) மன்னார் ஆன்டாங்குளம் பாடசாலையில் வைபவரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய , ஒரு இலட்சம் தென்னம் கன்றுகள் நடும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இரண்டாவது தென்னை முக்கோண வலயம் கடந்த செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

சி.ஐ.சி அக்ரிபிஸ்னஸ் நிறுவனத்தின் சமூக மேம்பாட்டுக்கான பொறுப்புடன் கூடிய செயலாற்றுகையின் மூலம் சி.ஐ.சி அக்ரிபிஸ்னஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது  வடமாகாணத்தின் புதிய தெங்கு முக்கோண வலய விருத்தியினை எளிதாக்கி வடக்கின் தெங்கு முக்கோண வலயம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும்,

தெங்குச்செய்கையாளர்களின்  வாழ்வியற் பொருளாதாரத்தினை பாடசாலை  மாணவர்களை பயன்படுத்தி ஊக்குவிப்பதனூடாக விருத்தி செய்வதில் பங்களிப்பு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: