வடக்கு – கிழக்கு மக்கள் ஒருபோதும் கைவிடப்பட மாட்டார்கள் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதி!
Saturday, July 4th, 2020
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தெற்கு மக்களின் வாக்குகளில் வெற்றி பெற்ற போதிலும் வடக்கு – கிழக்கு மக்கள் ஒருபோதும் கைவிடப்பட மாட்டார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை, குடாவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு – கிழக்கு மக்களின் வாக்குகள் இன்றி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி முடியாதென எதிர்க்கட்சியினால் பல்வேறு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. அது போன்றே இம்முறை பொதுத் தேர்தலிலும் அந்த கருத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு முயற்சிப்பதாக பிரதமர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு மக்களின் வாக்குளில் அதிகளவாக வெற்றி பெற்ற போதிலும் வடக்கு – கிழக்கு மக்கள் கைவிடப்பட மாட்டார்கள், அந்த மக்களை வெற்றி கொள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்று தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு – கிழக்கு மக்களை வெற்றிக் கொள்ளும் போது, தெற்கு இளைஞர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் வடக்கு – தெற்கு பேதமின்றி ஒன்றாக நாட்டை அபிவிருத்தி செய்வதற்காகவும் அனைத்து சந்தர்ப்பத்தில் எமது அரசாங்கம் செயற்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
|
|
|


