வடக்கு – கிழக்குக்கு 59 ஆயிரம் வீட்டுத்திட்டம்!

வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்காக பிரேரிக்கப்பட்டுள்ள 59 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை செயற்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைக்க உயர் அதிகாரிகள் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்காக சீமெந்து கற்கள் மற்றும் சீமெந்து ஆகியவற்றை பயன்படுத்தி 59 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் பிரேரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு, கிழக்கில் 6 ஆயிரம் பொறுத்து வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்துக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
பல்கலை மாணவர்களுக்கு விஷேட அறிவிப்பு - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்!
இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு - அ...
|
|