வடக்கு, கிழக்கில் வீடுகளை நிர்மாணிக்க மதிப்பீடுகள் ஆரம்பம்!
Saturday, June 9th, 2018
வடக்கு, கிழக்கில் 25 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் முதற்கட்ட நடவடிக்கைகளுக்கான ஆரம்ப மதிப்பீடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மதிப்பீடுகளை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இறுதிப்படுத்த முடியும் என வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் செயலணியின் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் அரசாங்கத்தின் திட்டத்தில் முதற்கட்டமாக 25 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை மேற்கொள்ள கடந்த மாதம் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எரிபொருள் விலை உயராது !
தொழில்களை தேடிக்கொள்வதற்கு ஏற்றவகையில் உயர்க்கல்வி முறைமையில் மாற்றம் மேற்கொள்வது அவசியம் - ஜனாதிபதி...
எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதிமுதல் மீள திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவிப்ப...
|
|
|


