வடக்கில் கடும் வெப்பம் – அச்சத்தில் மக்கள்!
Friday, May 4th, 2018
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பிரதேசங்களில் இன்று வெப்பமான காலநிலையை எதிர்பார்க்க முடியும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, பொலனறுவை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலுள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர்நாயகம் எஸ்.பிரேமலால் தெரிவித்தார்.
இன்னும் சில நாட்களில் தென்மேற்கு பருவமழை பெய்ய ஆரம்பிக்கும் என்றும், அதனை தொடர்ந்து வெப்ப நிலை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப காலநிலையின் போது கூடுதலாக நீரை பருகுவது முக்கியமானதாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
உடுவில் பிரதேசத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!
ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவுரை!
வடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு!
|
|
|


