வங்கிக் கடன் சலுகைகளை டிசம்பர் 31 வரை நீடிக்க மத்திய வங்கி முடிவு!
Saturday, September 4th, 2021
கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்கள் மற்றும் நபர்களுக்காக வழங்கப்பட்டுள்ள கடன் சலுகையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிவரை நீடிக்க இலங்கை மத்திய வங்கிக் தீர்மானித்துள்ளது.
அத்துடன் இது தொடர்பில் வங்கிகள் மற்றும் அனுமதி பெற்ற வணிக நிறுவனங்களுக்கு சுற்று நிரூபத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கொவிட் பரவலினால் பாதிக்கப்பட்ட தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணம் மாநகரப் பகுதியில் திண்மக்கழிவு சேகரிப்பு பெட்டிகள்!
வடக்கு மாகாணத் திணைக்களங்களுக்கு கணக்காளர்களை நியமிக்க நடவடிக்கை!
ரஷ்ய ஜனாதிபதியை இலங்கை வருமாறு அழைப்புவிடுத்தார் இலங்கை ஜனாதிபதி!
|
|
|


