வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருந்த தாழமுக்கம் வலுவடைந்துள்ளது!

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருந்த தாழமுக்கமானது தற்போது வலுவான தாழமுக்கமாக மாற்றமடைந்து, இலங்கையின் வடகிழக்கு திசையில் 1500 Km தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது இலங்கைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. எனினும் மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
பிற்பகல் 2 மணியின் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. அத்துடன் இடிமின்னல் ஏற்படும் போது அவதானமான நடைமுறைகளை பின்பற்றுமாறும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
Related posts:
மார்ச் மாதம் இலங்கை மைத்திதி – ட்ரம்ப் விசேட கலந்துரையாடல்!
மாகாணசபை தேர்தலை எதிர்கொள்ள அரசு தயாராகவுள்ளது - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!
மாணவர்களுக்கான தடுப்பூசி தொடர்பில் பெற்றோர்களின் அனுமதி கட்டாயம் பெறப்பட வேண்டும் - கல்வி அமைச்சு அற...
|
|