லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்கள் வெளியிட்ட விசேட அறிவிப்பு!

Wednesday, November 9th, 2022

லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய இரண்டு எரிவாயு நிறுவனங்களும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை தட்டுப்பாடின்றி வெளியிடுவதாக இரு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எனவே எரிவாயு தட்டுப்பாடின்றி வெளியிடப்படும் எனவும், ஏதேனும் ஒரு பகுதியில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டால் நிறுவனத்திற்கு தெரிவிக்குமாறும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்

மேலும், லாஃப் எரிவாயுவையும் தட்டுப்பாடின்றி வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய இரண்டு வகையான எரிவாயுக்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது

Related posts:


அரசை விட்டு எவரும் வெளியேறலாம் - வெளியில் இருந்தும் எவரும் இணையலாம் - கதவுகள் திறந்தே உள்ளன - நிதியம...
இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்க அனுமதி - தமிழக முதல்வருக்கு இந்நிய வெளியுறவ...
நாட்டில் குற்றச் செயல்களை ஒடுக்குவதற்கு மக்களின் ஆதரவு பொலிஸாருக்கு தேவை - பொலிஸாரை நம்பிய சமூகம் ...