லாஃப் மற்றும் லிட்ரோ எரிவாயு விலைகள் சமமாக இருக்கும் வகையில் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை – வர்த்தக அமைச்சர் நளின் அறிவிப்பு!
Sunday, July 23rd, 2023
லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயுவின் விலைகளை சமமாக இருக்கும் வகையில் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சந்தையில் லிட்ரோ எரிவாயுவின் விலையுடன் ஒப்பிடும் போது லாஃப்ஸ் எரிவாயுவின் விலைகள் அதிகம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமை குறித்து லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்துடன் கலந்துரையாடியதாகவும், விலை திருத்தம் தொடர்பான ஒப்பந்தத்தை அடுத்த வாரத்திற்குள் வழங்குவதாக அந்த நிறுவனம் உறுதியளித்ததாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சாரதித்துவ தவறுகளுக்கு 10 வருட சிறையுடன் 50000 ரூபா தண்டம் அறவிட தீர்மானம்!
பொலிஸ் சான்றிதழ்கள் இனி இணயத்திலும் பெற்றுக்கொள்ளலாம்!
எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலை இலங்கை கடற்பரப்பில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை!
|
|
|


