ரயில் திணைக்களத்திற்கு வருடாந்தம் 15 பில்லியன் ரூபா வரை நட்டம் அதிகரிப்பு!

தற்போதைய நெருக்கடி நிலையில் ரயில் திணைக்களத்திற்கு வருடாந்தம் 15 பில்லியன் ரூபா வரை நட்டம் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் மாத்திரம் பல சந்தர்ப்பங்களில் எரிபொருள் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும், அதற்கு நிகராக தொடருந்து பயணக் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது..
பேருந்து பயணக் கட்டணத்துடன் ஒப்பிடுகையில் நான்கில் ஒரு பங்கை விடவும் குறைவான கட்டணமே தொடருந்துக்கு அறவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் பேருந்து பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட்டமையை அடுத்து தொடருந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அவ்வாறு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும் பயணக் கட்டணம் குறைவாக உள்ளமையினால் ஏற்படும் நட்டத்தை ஈடு செய்ய முடியாமல் உள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தெல்லிப்பளை பிரதேச செயலரை இடமாற்ற மகஜர்!
புதிய பாதுகாப்பு செயலாளராக கபில வைத்தியரத்ன?
இன்றும் 8 மணி தொடக்கம் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில்!
|
|