ரஞ்சன் ராமநாயக்கவின் பிணை விவகாரம்: நுகேகொட நீதிமன்றத்தில் சரணடைந்தார் சுமந்திரன் – சுமந்திரன் மக்களுக்கு பொய்யுரைத்ததும் அம்பலமானது!

Wednesday, April 29th, 2020

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமனாயக்கவின் பிணை வழங்கியமை தொடர்பில் நுகேகொட நீதிமன்றம் நேற்றையதினம் விளக்கமளித்துள்ளது.

நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பாட்ட முறைமை சட்டரவிரோதம் என்ற தீர்மானத்திற்கும் நீதிமன்றம் வரவில்லை என்றும் நுகேகொட நீதிமன்றின் பிரதான நீதிவான் மொகமட் நிகால் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்பதாக பொலிஸாரின் அனுமதிக் கடிதம் இன்றி ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோது ரஞ்சன் ராமநாயக்கா பொதுவெளியே நாடமாடினார் என்றும் பொலிஸாரின் கடமைகளுக்குத் தடைகள் ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்கா கைதாகி விளக்கமயலில் வைக்கப்பட்டிருந்தார்

இந்நிலையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது எந்தச் சட்டத்தின் கீழ் என்று கேள்வி, எழுப்பி ஊரடங்குச் சட்டம் தவறானது எனச் சுட்டிக்காட்டியதாலேயே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்காவுக்கு, நுகேகொட நீதிமன்றம் பிணை வழங்கியதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏசுமந்திரன் ஊடகங்களுக்குக் கருத்துத் கூறியிருந்தார்.

இதுவிடயம் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை சுமந்திரனை அழைத்த நுகேகொட நீதிமன்றம், ரஞ்சன் ராமநாயக்காவுக்குப் பிணை வழங்கியமை தொடர்பாக ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட செய்திகள் குறித்து விளக்கம் கோரியிருந்தது.

ஊரடங்குச் சட்டம் தவறானது என்ற அடிப்படையில் ரஞ்சன் ராமநாயக்காவுக்குப் பிணை வழங்கப்பட்டதா என்று நீதவானிடம் பொலிஸார் கேள்வி கேட்டுப் நுகோகொட நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.  அதற்கு ஆதாரமாக நாளேடுகள், இணையச் செய்திகளையும் பொலிஸார் மன்றில் சமர்ப்பித்திருந்தனர். பொலிஸாரின் இந்த நகர்த்தல் பத்திரம் தொடர்பாகவே சுமந்திரன் அழைக்கப்பட்டு விளக்கம் கோரப்படிருந்தார்.

அத்துடன் நுகேகொட நீதிமன்றம் குற்றங்களின் அடிப்படையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுக்குப் பிணை வழங்கும் நீதிமன்றமே தவிர, அரசியலமைப்புச் சட்டங்களுக்கு ஏற்ப தீர்ப்பு வழங்கும் நீதிமன்றம் அல்ல எனவும் சுமந்திரனுக்கு தெரிவித்துள்ளது.

விளக்கம் முடிவடைந்து நீதிமன்றத்திற்கு வெளியே வந்த சுமந்திரன் ஊடகவியலாளர்கள் இது தெர்டர்பில் கேட்டபோது – ரஞ்சன் ராமநாயக்காவுக்குப் பிணை வழங்கப்பட்ட வழங்கில், ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டமை தவறு என்பது தொடர்பாக நீதிமன்றத்தில் தான் எதுவுமே பேசில்லை. அத்துடன் தான் கூறியதாக அச்சு ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பாகப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நீதிவான் முன்னிலையில் சுட்டிக்காட்டியதாகவும் சுமந்திரன் பதட்டமான குரலில் கூறியுள்ளார்.

இந்நிலையில் தமது போலியான அரசியல் பிரசாரத்துக்காக ஊடகங்களுக்குப் பொய்யான தகவலை சுமந்திரன் வழங்கியிருக்கிறார் என்பது உறுதியாகின்றது.

அத்துடன் ரஞ்சன் ராமநாயக்காவுக்குப் பிணை வழங்கப்பட்ட விடயத்தைச் சுமந்திரன் தவறாகத் திசை திருப்பி மக்களையும் தவறாக வழிநடத்தியுள்ளாரென்றே பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்த தமது நகர்த்தல் பத்திரத்தில் குற்றம் சுமத்தியிருந்தனர்.

அத்துடன் தமிழ் மக்களை ஏமாற்றி தமது சுயநல தேவைகளை மேற்கொண்டுவரும் சுமந்திரன் இந்த விடயத்தையும் அதுபோல பிரசாரப்படுத்த முற்பட்டு மூக்குடைபட்டள்ளார் என்பது புலனாகின்றது.

அத்துடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள் ஊரடங்கு சட்டம் எந்தவகையிலம் சட்ட விதிமுறைகளை மீறியது அல்ல என்றும் அது சட்டரீதியானது என்றுமம் உறுதியாகியுள்ளது.

எனவே நீதிமன்ற அவமதிப்பு என்று குற்றம் சுமத்திச் சுமந்திரன் மீது பொலிஸார் வழக்குத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: