யுத்தத்தில் வெற்றி கண்ட ஜனாதிபதி பிரதமர் ஆகியோருக்கு கொரோனாவிலிருந்து நாட்டை மீட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது பெரிதல்ல – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

Tuesday, March 2nd, 2021

இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் 10 இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

யுத்தத்தை வெற்றி கொண்ட மஹிந்த ராஜபக்ஷ கோட்டாபய ராஜபக்ச இணைந்த குழுவுக்கு கொரோனாவிலிருந்து நாட்டை மீட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது பெரிதல்ல என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலகில் 130 நாடுகள் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ள போது இலங்கைக்கு தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளமை அரசாங்கத்துக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். எம்மை விட முன்னேற்றமடைந்த நாடுகளான நியூசிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் இன்னும் கூட தடுப்பூசி யைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளன.

அதுபோன்று 136 நாடுகள் தடுப்பூசியை இதுவரை பெற்றுக் கொள்ளவில்லை. எனினும் எமது ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டு மக்களின் நலன்களிலேயே கவனம் செலுத்தியுள்ளனர். அதற்கு முதலிடம் வழங்கி செயல்பட்டு வருகின்றனர். அதனால்தான் கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளில் இலங்கை 10-வது இடத்தை பெற்றுக்கொண்டு ள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: