யாழ்.மாவட்ட புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் இன்று பொறுப்பேற்பு!

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சஞ்சீவ தர்மரத்ன இன்று (26) காலை 10.00 மணியளவில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
இன்றையதினம் யாழ்.பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அணிவகுப்பு மரியாதைகளுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வின் பின்னர் பௌத்த, இந்து, இஸ்லாம், மற்றும் கிறிஸ்தவ மத வழிபாடுகள் நடைபெற்றன. அதன் பின்னர் பதிவேட்டில் கையொப்பமிட்டு தனது கடமைகளை புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பொலிஸ்மா அதிபர் சட்டம் மற்றும் நீதிக்கு அமைவாக யாழில் நடைபெறும், குற்றச் செயல்களை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை நீதியின் வழியில் மேற்கொள்வேன் என்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மாத்தளை பொலிஸ் பிரிவில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய இவர் யாழ்ப்பாணத்திற்கு பிரதிப் பொலிஸ்மா அதிபராக இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நான்கு மாதங்களில் 94 படுகொலைகள் - பொலிஸ்மா அதிபர்!
வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதம் இன்று!
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மகிழ்ச்சியளிக்கிறது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
|
|