யாழ்.மாவட்டத்திலும் பசுமை நிகழ்ச்சித் திட்டம்!
Saturday, December 3rd, 2016
அடுத்த ஆண்டு யாழ்.மாவட்டத்திலும் பசுமை நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மேற்படி திட்டத்தை முழுமையாப நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய ரீதியில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இத்திட்டத்தின் ஓர் அங்கமாகவே யாழ்.மாவட்டத்திலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின்படி நாடு முழுவதிலும் உள்ள சுமார் பத்தாயிரம் கிராமங்களைத் தெரிவு செய்து அவற்றை பசுமைமிக்க கிராமங்களாக மாற்றி அமைப்பதே இலக்கு. இதற்கு அமைவாக ஆரம்ப நடவடிக்கைகள ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொருத்தமான கிராமங்களைத் தெரிவுசெய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யாழ்மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலர் பிரிவுகளிலிருந்தும் தலா ஒரு கிராமத்தை தெரிவு செய்து இத்திட்டத்தை ஆரம்பிக்கும்படி யாழ்.மாவட்ட செயலகம் கூறியுள்ளது.

Related posts:
|
|
|


