யாழ். மாநகர சபையின் எல்லைக்குள் முக்கிய இடங்களில் கழிவுகள் வீசுவோரைக் கண்டறியக் கண்காணிப்புக்  கமராக்கள் பொருத்த நடவடிக்கை!

Tuesday, September 6th, 2016

யாழ். மாநகர சபையின் எல்லைக்குள் முக்கிய இடங்களில் கழிவுகள் வீசுவோரைக் கண்டறியக் கண்காணிப்பு கமராக்களைப் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ். மாநகர சபையின் எல்லைக்குள் மக்கள் கழிவுகளைக் கொட்டுவதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் கொட்டாமல் கண்ட கண்டவிடங்களில் கழிவுகளைக் கொட்டி வருகின்றனர். சிலர் இரவு வேளைகளில் கழிவுகளைப் பொதியாக்கி வீதிகளில் கொண்டு வந்து போட்டு விட்டுச் செல்கின்றனர். இதன் காரணமாகத் திண்மக் கழிவகற்றும் நடவடிக்கையில் மாநகர சபைக்குப் பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றன.

இந்தநிலையில் நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் போது ஆலயச் சுற்றாடலில் பயன்படுத்தப்பட்ட கண்காணிப்புக் காமராக்களை மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட முக்கியவிடங்களில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கழிவுப் பொருட்களைக் கண்டகண்டவிடங்களில் கொட்டுவோர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்துள்ளார்.

kamara-720x480

Related posts: