யாழ். மாநகரப் பிரதேசத்தில் திண்ம கழிவகற்றும் பணி முன்னெடுப்பு!

யாழ்ப்பாண மாநகரப் பிரதேசத்தில் திண்மக் கழிவுகளை அகற்றும் பணிகள் தற்போது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன.
திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கு மேலதிக வாகனங்கள் பயன்பாட்டுக்கு ஈடுபடுத்தப்பட்டும் வருகின்றன. கூடுதலான இடங்களில் தேங்கும் கழிவுகள் தினமும்
அகற்றப்பட்டு வருவதாக மாநகர ஆணையாளர் தெரிவித்தார். இதேசமயம் மாநகரப்பிரதேசத்தில் பொது இடங்கள், பாடசாலைகள், அரச அலுவலகங்கள்
போன்றவற்றுக்கு கழிவுகளை சேகரிக்கும் பெட்டிகள் வைக்கப்பட்டு வருகின்றன. தற்போது முதற்கட்டமாக 19 கழிவு சேகரிக்கும் பெட்டிகள் அமைக்கப்பட்டுவைக்கப்பட்டுள்ளன.இந்தப் பெட்டிகளில் மக்கள் கழிவுகளை தரம் பிரித்து தருமாறு மாநகர சபை ஆணையாளர் கேட்டுள்ளார்.
வட்டார ரீதியாகவும் கூடுதலாக குப்பைகள் தேங்கும் இடங்களில் திண்மக் கழிவு சேகரிக்கும் பெட்டிகள் பரவலாக வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
Related posts:
அரச பணியாளர்களின் இடமாற்றக் கொள்ளை கல்விச்சேவை ஊழியர்களுக்கும் பொருந்தும் - கல்வி அமைச்சர்
ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ்.மாவட்ட தனியார் வகுப்புகளுக்கு விடுமுறை - அரச அதிபர் அதிரடி அறிவிப்பு!
பொதுச் சேவையை வினைத்திறனாக்குவதற்காக அதிகாரிகளுக்கு தனிப்பட்ட பாவனைக்காக வழங்கப்பட்ட தொலைபேசிகளில் 4...
|
|