யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவபீட கற்கைநெறி கட்டட தொகுதி!
Wednesday, December 28th, 2016
யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவபீட கற்கைநெறி கட்டட தொகுதி அமைப்பதற்கு எவ்வித தடைகளும் இல்லையென யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேற்படி கட்டிட தொகுதியை அமைப்பதற்கு வைத்தியசாலையின் வைத்தியர்களும் வேறு சிலரும் முட்டுக்கட்டையாக இருப்பதாக வெளியாகியிருந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியசாலையின் மேற்குப் பகுதியில் மருத்துவ பீடத்திற்கு ஒதுக்கப்பட்ட 4 பரப்பு காணியில் குறித்த கட்டட தொகுதியை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள வைத்தியசாலை பணிப்பாளர் இக்கட்டட தொகுதியை அமைப்பதற்கு அனைத்து ஊழியர்களும் பூரண ஆதரவை வழங்குவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts:
க.பொ.த.சா/த மாணவர்களுக்கான கருத்தரங்குகளுக்கு தடை!
கொரோனா தொற்றுடன் 42 பேர் அடையாளம் - தம்புள்ள விசேட பொருளாதார மத்திய நிலையமும் பூட்டு!
யாழில் தடுப்பூசி வழங்கும் நிலையங்களை அதிகரிக்குமாறு நாமல் உத்தரவு!
|
|
|


