யாழ். போதனாவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்!
Tuesday, February 19th, 2019
யாழ். போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் மதுபோதையில் வந்த இனந்தெரியாத நபர்களால் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 22 வயதுடைய லோகநாதன் கீர்த்திகன் என்ற பாதுகாப்பு உத்தியோகஸ்தரே தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வருகிறார்.
இத்தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தில் ஒருவரை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Related posts:
தூர நோக்குடைய அரசியல் தலைமையை ஏற்படுத்துவதனூடாகத்தான் தமிழ் மக்கள் தமது உரிமைகளையும் வாழ்வியலையும் ...
குடாநாட்டில் மூவாயிரம் படகுகள் பதிவு - கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம்!
20 ஆவது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மனுத்தாக்கல்!
|
|
|


