யாழ், கிளிநொச்சி, வவுனியாவின் சில பகுதிகளில் இன்று மின்தடை !
Wednesday, September 13th, 2017
மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியாவின் சில பகுதிகளில் இன்று புதன்கிழமை(13) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம், இன்று காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்ப்பாணத்தின் உடுத்துறை, மரு தங்கேணி, வத்திராயன், கொடுக்குளாய், ஆழியவளை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, கேவில், வெற்றிலைக்கேணி இராணுவ முகாம், கட்டைக்காடு இராணுவ முகாம் ஆகிய பகுதிகளிலும்,
காலை- 09 மணி முதல் மாலை-05 மணி வரை கிளிநொச்சியின் பல்லவராயன் கட்டு ஒரு பகுதி, நாகபடுவான், சோலை, ஜெயபுரம் ஆகிய பகுதிகளிலும்,
காலை-08 மணி முதல் மாலை-05.30 மணி வரை வவுனியாவின் தவசிக்குளம் கிராமம், அட்டம்பஸ்கட கிராமம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
பருத்தித்துறை பிரதேச சபைக்கு புதிய கட்டடம்!
15ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு - கல்வி அமைச்சர்!
வறிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்த நாம் தயாராகவே இருக்கின்றோம் – ஈ.பி.டி.பியின் நல்லூர் ...
|
|
|


