யாழ்ப்பாணத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய இருதய சத்திரசிகிச்சைப் பிரிவு நிர்மாணிக்க சீனாவுடன் ஒப்பந்தம்!

Saturday, October 8th, 2016

யாழ்ப்பாணத்தில் அதி நவின வசதிகளுடன் கூடிய இருதய சத்திரசிகிச்சைப் பிரிவொன்றை நிர்மாணிப்பதற்கு சீனாவுடன் ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்றைதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் வினாக்களுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் சகல வசதிகளும் கொண்ட இருதய சத்திரசிகிச்சைப் பிரிவொன்றை நிர்மாணிப்பதற்கு சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். குறித்த கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு நிதி சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு பூர்த்தியாகியுள்ளன. இருந்தபோதிலும் கட்டட நிர்மாணப் பணிகளுக்கான நடவடிக்கை ஒழுங்குமுறை பிரகாரம் ஆரம்பிக்கப்படவில்லை. இது குறித்து யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் செய்திருந்தபோது பரவலாக ஆராய்ந்தேன். அத்துடன், குறித்த இருதய சத்திர சிகிச்சையில் பணியாற்றுவதற்கு 4 பேருக்கு கொழும்பிலுள்ள தேசிய வைத்தியசாலையில் பயிற்சி அளித்து வருகின்றோம் என தெரிவித்தார். யாழ்.போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள இருதய சத்திரசிகிச்சைப் பிரிவை விரிவுபடுத்த வேண்டுமென பல தரப்பினராலும் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

hospital-jaffna--china-sri-lanka

Related posts:


வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைது!
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு – ஜனாதிபதி ரணில் தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு இரண்டு நாள...
நுண்நிதி கடன் வலையில் சிக்குண்டு இருநூறுக்கும் மேற்பட்டோர் தற்கொலை - சனத்தொகை புள்ளிவிபரத் திணைக்களத...