யாழ்ப்பாணத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் டெங்கு நோய்த் தொற்று ஆபத்து அதி உச்சமாக உள்ளது என இலங்கை நோய்தொற்றியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் நோய்த்தொற்றியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, மட்டக்களப்பு, கம்பஹா, மாத்தறை, இரத்தினபுரி, கண்டி, கேகாலை, காலி, களுத்துறை மற்றும் குருணாகல் ஆகிய 12 மாவட்டங்களில் டெங்கு நோய்த் தொற்று ஆபத்து அதி உச்சம் கொண்ட மாவட்டங்களாக 2016, 2017 மற்றும் 2018 முதல் 5 மாதங்களின் புள்ளி விவரங்களின் மூலம் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.
Related posts:
கடந்த 5 நாட்களாக மூடப்பட்டிருந்த முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு விநியோக முனையம் இன்று மீண்டும் திறக்கப்...
அனைத்து அரச நிறுவனங்களும் கோப் குழுவின் முன் அழைக்க முடிவு - கோப் குழுவின் தலைவர் தெரிவிப்பு!
இலங்கையில் 35 வீதமானோருக்கு உயர் இரத்த அழுத்தம் – சுகாதார துறை எச்சரிப்பு!!
|
|