யாழில் மூன்றாவது மலேரியா நோயாளரும் அடையாளம் காணப்பட்டார்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மலேரியா நோயாளி ஒருவர் நேற்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குருநகர் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், தென்னாபிரிக்காவில் இருந்து அண்மையில் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது..
அத்துடன் கடந்த ஒரு மாதத்தில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்ட மூன்றாவது மலேரியா நோயாளர் இவராவார்.
முன்னதாக, மல்லாகம் மற்றும் ஆனைக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவர் மலேரியாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பெண்களின் வாழ்வாதாரம் மேலும் உயர வேண்டும் - பெண்களது நிகழ்வில் யாழ். மாநகர முன்னாள் பிரதி முதல்வர் ற...
நடமாடும் வர்த்தக சேவையை மேற்கொள்வதனூடாக மக்களின் நடமாட்டத்தை குறைக்க முடியும் – கிளிநொச்சி மாவட்ட அ...
24,25,26 ஆம் திகதிகளில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் - நாடாளுமன்ற விவகாரங...
|
|