மொரிஸியஸ் நாட்டின் முன்னாள் தூதுவர் ஈஸ்வரன் காலமானார்
Sunday, January 7th, 2018
இலங்கைக்கான மொரிஸியஸ் நாட்டின் முன்னாள் தூதுவரும், பிரபல தொழிலதிபரும் கம்பன் கழக முன்னாள் தலைவருமான தேசபந்து தெய்வநாயகம் பிள்ளை ஈஸ்வரன் நேற்று காலமானார்.
இறக்கும் போது 76 வயது. சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பிற்பகல் காலமானhர்.
இவர் பிரபல சமய, சமூக சேவையாளராவார். கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் அறங்காவலராகவும் பணியாற்றி வந்தார்.
பூதவுடல் இலக்கம் 133, புதுச் செட்டித்தெரு, கொழும்பு 13 என்ற முகவரியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில்; இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிக் கிரியைகள் கொழும்பில் நாளை திங்கட்கிழமை மாலை இடம்பெறும்.
Related posts:
அவதானமாக செயற்படுமாறு இலங்கையருக்கு எச்சரிக்கை!
சிறுவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் டெங்கு மற்றும் கொவிட் தாக்கம் - மருத்துவர் தீபால் பெரேரா எச்சர...
சோளத்தை 160 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய கால்நடை உற்பத்தியாளர் இணக்கம் – விவசாய அமைச்சு தெரிவிப்பு!
|
|
|
அனைத்து நிர்மாணப் பணிகளும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் மேற்பார்வையில் துரிதப்படுத்தப்பட...
மதத்தலைவர்கள் சிலர் போதிக்கும் பிழையான விடயங்களை நம்பவேண்டாம் - கிடைக்கின்ற தடுப்பூசிகளை பெற்றுக்கொ...
அதிக காற்று - வேலணை செல்ல கதிர்காமம் முருகன் கோயில் கூரை ஓடுகள் தூக்கி வீசப்பட்டு பகுதியளவில் சேதம்!...


