மொனிக்கா பின்ட்டோவின் அறிக்கை போலியானது – அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி திருமதி மொனிக்கா பின்ட்டோ இலங்கை தொடர்பில் சமர்ப்பித்த அறிக்கை உண்மைக்குப்புறம்பானது.
நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தொவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விசேட விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர், இந்த அறிக்கை போலி தகவல்களை உள்ளடக்கியதாகும் என்றும் குறிப்பிட்டார்.
திருமதி பின்ட்டோ இலங்கையில் ஏழு நாட்கள் மாத்திரமே தங்கியிருந்தார். இத்தகைய குறுகிய காலப்பகுதியில் விடயம் அறிந்து, அறிக்கையை சமர்ப்பிப்பது சாத்தியமில்லை. இதனை அரச சார்பற்ற அமைப்புக்கள் தயாரித்திருக்கக் கூடுமென நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் கூறினார்.
Related posts:
நல்லிணக்கத்திற்கான மத்திய நிலையங்களாக விளையாட்டு மைதானங்கள் உள்ளன - ஜனாதிபதி!
சத்துணவு வழங்கும் திட்டம் யாழில் ஆரம்பிக்கப்படும் - அரச அதிபர் வேதநாயகன் தெரிவிப்பு!
ஊவ வெல்லஸ்ஸ புரட்சி வீரர்களை நாட்டுப்பற்றுள்ளவர்களாக பிரகடனப்படுத்தும் வைபவம் இன்று!
|
|