மே 11 இல் பல்கலைக்கழக செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம் – பல்கலை மானிய ஆணைக்குழு!
Sunday, April 12th, 2020
எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி பல்கலைக்கழக செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழங்கள் மானிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் 4ஆம் திகதி பல்கலைக்கழக நிர்வாகத்தினர் அழைக்கப்பட்டு அடுத்த செயற்பாடுகள் குறித்து தெளிவுப்படுத்தப்படும்.
மே மாதம் 11ஆம் திகதி இறுதியாண்டு மாணவர்களுக்கும் 18 ஆம் திகதி ஏனைய மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் 11ஆம் திகதி நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் இரண்டாம் தவணைக்காக ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மின்தட்டுப்பாடு ஏற்படலாம்?
தேசிய கொள்கை ஒன்றின் ஊடாக நாட்டை கட்டியெழுப்புவதற்கு சகல அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் பகிரங...
வழமைபோன்று விவேகமிழந்தவர்களாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்றும் உள்ளனர் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்ச...
|
|
|


