மேலும் 3 பொலிஸ் பிரிவுகள் இன்று முடக்கப்பட்டன – இராணுவத் தளபதி அறிவிப்பு!
Tuesday, May 18th, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளை ஆகிய 3 பொலிஸ் அதிகார பிரிவுகள், நேற்றிரவு 11 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சிலவா அறிவித்துள்ளார்.
அதேநேரம், இன்று காலை மேலும் இரண்டு மாவட்டங்களின் 3 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
இதன்படி கம்பஹா மாவட்டத்தின் கப்புகொட செபஸ்டியன் வீதியில் இருந்து தெபடிய வீதி வரையான பகுதியும், பிட்டிபன – லெல்லம பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் ஹம்பாந்தொட்டை மாவட்டத்தின் ரொட்டே கிராமசேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
75% பல்கலைக்கழக ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு த...
வாக்காளர் இடாப்பு பிரதிகளை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப...
இந்தோனேசியாவில் பெய்துவரும் கனமழை - 32 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்!
|
|
|


