மெக்சிக்கோவின் பசுபிக் கடற்கரையை நோக்கி நகரும் சூறாவளி வலுவிழந்துள்ளது – அமெரிக்க வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை!
 Sunday, August 20th, 2023
        
                    Sunday, August 20th, 2023
            
மெக்சிக்கோவின் பசுபிக் கடற்கரையை நோக்கி நகரும் சூறாவளி வலுவிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதனால் ஏற்பட்டு வரும் பெருவெள்ளம் உயிர்சேதத்தை விளைவிக்கலாம் என அமெரிக்க வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஹிலரி எனப்படும் இந்த சூறாவளி மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் நிலையில் தற்போது வீழ்ச்சியடைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் கலிபோனியா தீபகற்பகம் மற்றும் அமெரிக்காவின் தென் மேற்கு பகுதிகளில் காலநிலை சீர்கேடு தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
80 வருடங்களுக்கு பின்னர் இந்த வகையிலான சூறாவளி குறிப்பிட்ட பிரதேசங்களை தாக்கி வருவதாக காலநிலைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, சூறாவளி நகர்ந்து செல்லும் பகுதிகளில் வாழும் மக்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை அவதானிக்கும்படி ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        