மூன்று வருடத்தில் 321 பரிரேரணைகள்: வாக்களித்த மக்கள் வீதியில் – சாதனை படைத்தது வடக்கு மாகாண சபை!
Saturday, January 21st, 2017
தமிழ் மக்களது பல ஆயிரம் தியாகங்கள் மூலம் பெறப்பட்ட வடக்கு மாகாண சபையில் இதுவரை நடைபெற்ற 81 கூட்டத் தொடர்களில் மக்கள் நலன்சாராத 321 பிரேரணைகளை நிறைவேற்றப்பட்டுள்ளதே அன்றி மக்களை கண்டுகொள்ளவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு மாகாணசபை தேர்தலில் தீர்வுபெற்றுத்தர இறுதிச் சந்தர்ப்பம் இது என மக்களை உசுப்பேற்றி மாகாண சபையின் அதிகாரத்தை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர், அமைந்தது தனியரசு எனக்கூறி நீதியரசர் விக்னேஷ்வரன் தலைமையில் அமைத்த வட மாகாண சபையில் இன்றுவரை தமிழ் மக்களுக்கான எந்தவொரு நலத்திட்டத்தையும் முன்னெடுக்காது விவாதித்துக்கொண்டிருப்பதுடன்வெ ற்றுத்தாள்களில் அச்சிடப்பட்ட பிரேரணைகளை மட்டுமே நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றனர் என வாக்களித்த மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Related posts:
தீவகத்தை வளமான தேசமாக்க முழுமையான அரசியல் பலத்தை தாருங்கள் – வேட்பாளர் ஜெயகாந்தன்!
இலங்கை - சீன இடையே இறப்பர் - அரிசி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டு நிறைவு - சீனாவில் இருந்து நன்...
மியன்மாரிலிருந்து ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி - வர்த்தக அமைச்சு தீர்மானம்!
|
|
|


