முழு நாடும் கொரோனா தொற்றும் வலயமாக அறிவிப்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன!

Saturday, October 17th, 2020

தற்போதைய நிலைமையில் முழு நாட்டையும் கொரோனா தொற்றும் வலயமாக அறிவிக்க நேரிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

எனினும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஏதுவான வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரச மற்றும் தனியார் நிறுவனங்களை வழமை போல் இயக்க முடியும் எனவும், சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது நிறுவன பிரதானிகளின் கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அதிகளவான ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் தினமும் சேவைக்கு வரக் கூடிய ஊழியர்களின் எண்ணிக்கையை பிரதேச சுகாதார அதிகாரிகள் தீர்மானிப்பார்கள் எனவும் குறிப்பிட்டார்.

இவ்வாறு வரும் ஊழியர்கள் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பேணுவது கட்டாயம் என்பதுடன் அடிக்கடி உடல் உஷ்ணத்தை கண்காணிக்க வேண்டும் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இலங்கையில் எல்லை மீறும் கொரோனா தொற்று – நான்கு மாவட்டங்களில் நோய்த்தொற்று இல்லை என சுகாதார அமைச்சு அ...
ஓய்வூதிய வயதை 60 ஆக உயர்வு - பெண்கள் பணிபுரிவது தொடர்பாக அவர்கள் தான் தீர்மானிக்கவேண்டும் - பொதுச் ...
பொதுப் போக்குவரத்தின் போது சுகாதார விதிமறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை - பொலிஸ் ஊட...