முற்றுகையாகவுள்ள அமைச்சர் பைஸர் முஸ்தபா வீடு?
Monday, May 8th, 2017
காலம் தாழ்த்தப்பட்டு வரும் உள்ளுராட்சி சபை தேர்தலை விரைவில் நடத்தாவிட்டால் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் வீட்டை முற்றுகையிட உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் மாகாணசபை உறுப்பினர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்கள், கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களை பார்த்து அரசாங்கம் அச்சம் அடைந்துள்ளது.அதன் காரணமாகவே தேர்தலை நடத்த அரசாங்கம் தயக்கம் காட்டி வருகின்றது.
எனவே, விரைவில் உள்ளுராட்சி சபை தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும். அவ்வாறு இல்லாது போனால் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் வீட்டை முற்றுகையிட உள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
Related posts:
விவசாயப் பண்ணை வலயங்கள் அமைக்க நடவடிக்கை - கைத்தொழில் அமைச்சர் தயா கமகே!
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனம் 2018
தாமதிப்பதற்கான மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை - தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய!
|
|
|


