முறையிடச் சென்றவரை கைது செய்தனர் பொலிஸார்!

Friday, February 8th, 2019

தொடருந்து காப்பாளருக்கு எதிராக முறையிடச் சென்ற ஒருவரை போக்குவரத்து விதிமுறையை மீறி ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில் யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து கடந்த சில தினங்களுக்கு முன் ஸ்ரான்லி வீதி ஊடாகப் பயணித்தது. சிறிதர் தியேட்டருக்கு அருகில் உள்ள தொடருந்துக் கடவையின் காப்பாளர் வீதிக் கடவையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். தனியார் பேருந்துச் சாரதி பயணிகளுடன் கடவைக்கு ஊடாகக் கடக்க முற்பட்டுள்ளார். தனியார் பேருந்து கடவைக்கு இடையில் சிக்கியுள்ளது. தனியார் பேருந்தில் பயணித்த பயணிகள் அலறியடித்து வெளியேறினர். தொடருந்து தனியார் பேருந்தை மோதும் ஆபத்தான நிலமை காணப்பட்டது. அந்தப் பகுதியில் நின்றவர்கள் கடவையை தூக்கி சிக்கியிருந்த தனியார் பேருந்தை மீட்டார்கள்.

தொடருந்துக் கடவையாளர் விதிமுறை மீறிச் செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தி தனியார் பேருந்துச் சாரதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். இது தொடர்பில் விசாரணை முன்னெடுத்தோம். வீதி விதிமுறையை மீறி ஆபத்தான முறையில் பேருந்தைச் செலுத்திய குற்றச்சாட்டில் அவரைக் கைது செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts:

காரைநகர் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்திற்கு நவீன வெல்ல இயந்திரங்கள் வழங்கிவைப்பு!
மக்கள் எதிர்பார்க்கும் முறைமைகளில் மாற்றம் - அனைத்துத் துறைகளுக்கும் மாற்றமடையாத கொள்கை - அமைச்சர் ...
ஜனநாயக வழி போராட்டம் வன்முறை வழி நோக்கி செல்லாதிருக்க அரசு அவதானம் செலுத்த வேண்டும்  - வலி வடக்கு மீ...