முப்படையினர் இந்தியாவுக்குப் பயணம்!
Sunday, June 24th, 2018
இராணுவ உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் இலங்கையின் முப்படைகளையும் சேர்ந்த ஒரு தரப்பினரும் அவர்களின் குடும்பத்தினரும் மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
இந்திய இராணுவ பேச்சாளர் அமன் ஆனந்தை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இலங்கையின் 160 பேர் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
இன்று முதல் மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ள பயணத்தில், அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி மற்றும் புத்த கயா முதலான இடங்களை அவர்கள் பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அனைத்து பிரஜைகளுக்கும் வரி இலக்கம் அறிமுகம் - நிதி அமைச்சர்!
ஒக்சிஜன் வழங்குவதில் முன்னுரிமை வழங்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரி...
சேவை ஒப்பந்த மீறல் - 13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கான அனுமதி இரத்து!
|
|
|


