முன்னாள் பிரதமர் மகிந்தவிடம் குற்றப் புலனாய்வு துறையினர் வாக்குமூலம்!
Thursday, May 26th, 2022
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி, கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தனது கட்சி விசுவாசிகள் தாக்குதல் நடத்தியதன் விளைவாக நாடு முழுவதும் அமைதியின்மை வெடித்த சம்பவங்கள் குறித்து முன்னாள் பிரதமர் வாக்குமூலம் பதிவு செய்திருந்தார்.
மகிந்த ராஜபக்ச நேற்று மாலை சுமார் 03 மணித்தியாலங்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் பலர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் தமது கடவுச்சீட்டை நீதிமன்ற காவலில் ஒப்படைக்கவில்லை என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தேவையற்ற வகையில் குளோரோகுயின் மருந்தை கொள்வனவு செய்ய வேண்டாம் - 19 வைரஸ் பரவலை தடுப்பதற்கான தேசிய செ...
ரவிராஜ் படுகொலை: பொய்யான சாட்சிகளை தயாரிக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் குற்றப்புலனாய்வு திணைக்களத்...
பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் தரப்பில் குறைபாடுகள் இருந்தால் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை...
|
|
|


