முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வாகன விபத்தில் படுகாயம்!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மங்களவெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 5.40 அளவில் இடம்பெற்றதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது
குறித்த நால்வரும் பயணித்த சிற்றூர்ந்து வேகக்கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகியமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த அவர் புத்தளம் வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சீன வர்த்தக குழு இலங்கை வருகை!
23ஆம் திகதி முன்னிலையாகுமாறு பிரதமருக்கு அறிவிப்பு!
30,000 பேர் ஓய்வு பெறுவது பொதுச் சேவைகளுக்கு இடையூறாக இருக்காது - உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர...
|
|