முதியோரின் சேமநலன்களுக்காக முறையான வேலைத்திட்டம்!
Sunday, October 1st, 2017
அபிவிருத்தியில் இலக்கை வெற்றி கொள்வதற்காக திட்டங்களை வகுக்கும் போது முதியோரின் பங்களிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மகளிர் அலுவல்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் தேசிய மகளிர் குழுவின் முன்னாள் தலைவர் கலாநிதி நீலா பியசிலி குணசேகர தெரிவித்துள்ளார்.
சமூக கட்டமைப்பு உள்ள இலங்கையில், முதியோரை மதித்தல் மற்றும் அவர்களை பராமரிப்பதிலும் உயர்மட்டத்தில் இருப்பதாக இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு அவர் தெரிவித்தார்.
நாட்டின் முதியோரின் சேமநலன்களுக்காக சமூக ஊக்குவித்தல் மற்றும் சேமநல அமைச்சும், தேசிய முதியோர் செயலகமும் முறையாக வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
2050ம் ஆண்டளவில் மூன்று மடங்காக அதிகரிக்கவுள்ள முதியோரின் எண்ணிக்கைக்கு தேவையான கட்டமைப்பு ஒன்றை முன்பெடுப்பதற்கு திட்டத்தை தற்பொழுதிலிருந்தே தயாரிக்க வேண்டும் என்றும் திருமதி கலாநிதி நீலா பியசீலி குணசேகர இதன்போது சுட்டிக்காட்டினார்.
Related posts:
|
|
|


