முதலாம் தர அனுமதியில் முறைகேடுகளை அறிய தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்த அறிவுறுத்து – கல்வி அமைச்சர்!
Saturday, September 15th, 2018
தரம் ஒன்றில் பாடசாலை மாணவர்களை அனுமதிக்கும் நடைமுறையில் அநீதிகள் இழைக்கப்படுமானால் அதைப் பற்றி அறிந்து கொள்வதற்குத் தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்துமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சம்பந்தப்பட்ட தரப்புகளைக் கோரியுள்ளார்.
தம்மிடம் கோரப்படும் தகவல்களை தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் முறையாகப் பெற்றுக்கொடுக்குமாறு அமைச்சர் கல்வி அதிகாரிகளையும் அதிபர்மாரையும் கேட்டுள்ளார்.
கூட்டரசு ஆட்சிபீடம் ஏறியதைத் தொடர்ந்து சகல செயற்பாடுகளையும் உச்ச வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மக்களை ஏமாற்ற வேண்டிய தேவை அரசுக்குக் கிடையாது எனக் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தரம் ஒன்றுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தெரிவு செய்யப்படாத மாணவர்கள் சார்பில் பெற்றோர் மேன்முறையீடு செய்யலாம்.
போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பிள்ளை ஒன்று பாடசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் கல்வி அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் அந்தப் பிள்ளையைக் குறித்த பாடசாலையிலிருந்து வெளியேற்ற வேண்டி வரும் என்றும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
Related posts:
|
|
|


