முதலாம் தரம் குறித்த முறைப்பாடுகளை முன்வைகவும் – கல்வியமைச்சு!
Thursday, January 4th, 2018
2018ஆம் கல்வியாண்டுக்காக முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்கும் முறையில் ஏதாவது அநீதிகள் நடந்திருப்பின் குறித்த பாடசாலைக்கும் பின்னர் கல்வியமைச்சிற்குஅல்லது சம்பந்தப்பட்ட மாகாண கல்வி அமைச்சுக்கு முறைப்பாடுகளை முன்வைக்குமாறு கல்வியமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முதலாம் தரத்திற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்ப்பட்டியல் பாடசாலைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதோடு அநீதி இழைக்கப்பட்டோருக்கு நீதிகிடைக்கும் வகையில் முறைப்பாடுகளை ஆராய தீர்மானித்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் 15ஆம் திகதி முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்கும் நிகழ்ச்சி நடாத்த அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சுதெரிவித்துள்ளது.
Related posts:
புகையிலைச் செய்கையை முற்றாக ஒழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் -அமைச்சர் ராஜித சேனாரத்ன!
புனரமைக்கப்படுகிறது புளியங்கூடல் பொதுச்சந்தை : எழுவைதீவு மக்களின் கோரிக்கைக்கும் தீர்வு - ஊர்காவற்ற...
ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருவதில...
|
|
|


