முட்டை உற்பத்தியாளர்கள் நெகிழ்வுப் போக்கை காட்டினால் இறக்குமதி நிறுத்தப்படும் – அமைச்சர் நளின் தெரிவிப்பு!
Tuesday, August 1st, 2023
உள்ளுர் முட்டை உற்பத்தியாளர்கள் வளைந்து கொடுக்கும் வகையில் முட்டையின் விலையை குறைக்க பாடுபட்டால், முட்டை இறக்குமதி நிறுத்தப்படும் என வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நடைபெறாதுபோனால் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டையின் அளவு மற்றும் சந்தைக்குத் தேவையான முட்டையின் அளவு குறித்து ஆராயப்பட்டு, கால்நடை உற்பத்தி மற்றும் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களின் மேற்பார்வையின் கீழ் முட்டை இறக்குமதி முன்னெடுக்கப்படும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 824 ஆக உயர்வு - கொரோனா வைரஸ் தொற்று குறித்த பரிசோதனைகளில்...
பேருந்து சேவைகளை மட்டுப்படுத்தும் இலங்கை போக்குவரத்து சபை!
புங்குடுதீவிலிருந்து சட்டவிரோதமாக இறைச்சிக்காக மாடுகளை கடத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவ...
|
|
|


