முடிவு குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை – மஹிந்த அமரவீர!

Thursday, October 13th, 2016

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னரே, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர்இதனைத் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னரே, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியான ஓர் யோசனைத் தி;ட்டமொன்றை நிதி அமைச்சர் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது.

இந்த யோசனைத் திட்டங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல் வழங்கப்பட முடியாது.மக்களுக்கு உச்சளவில் நிவாரணங்களை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். தேவையற்ற வகையில் மக்கள் மீது வரிச் சுமையை திணிக்கவோ அல்லது மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை குறைக்கவோ சுதந்திரக் கட்சி இடமளிக்காது என மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

16-1444970253-mahinda-amaraweera234-600-720x480

Related posts: